தமிழ்நாட்டில் அரசு மற்றும் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவில் நிலங்கள் மீட்கப்பட்டது. இதுகுறித்து அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் ஆக்கிரமிப்பாளருக்கு அதிர்ச்சி தரும் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதாவது, அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பவர்களிடம் 10 மடங்கு கூடுதலாக மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்றுமாறு ஆவடி தாசில்தார் கொடுத்த நோட்டீசை எதிர்த்து அளிக்கப்பட்ட மனுவின் விசாரணையின்போது நீதிபதிகள் இதனை தெரிவித்தனர். மேலும் நிலத்தை அளந்து ஆக்கிரமிப்பு உள்ளதா என்று ஆராயவும் உத்தரவு பிறப்பித்தனர்.