சென்னை விமான நிலையத்தில் ரூபாய்.250 கோடி மதிப்பில் மல்டிலெவல் கார் பார்க்கிங், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், திரையரங்கம் அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. தற்போது பணிகள் முடிந்த நிலையில், பயணிகளின் பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்ட 5 திரைகள் கொண்ட திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் தான் திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் 1,000 பேர் ஒரே நேரத்தில் படம் பார்க்கலாம். அதுமட்டுமின்றி கூடிய விரைவில் உணவு விடுதிகள், சில்லறை கடைகள் திறக்கப்படவுள்ளது. இந்த திரையரங்கை நடிகர்கள் சதீஷ், ஆனந்த் ராஜ், கூல்சுரேஷ், டைரக்டர் வெங்கி, தயாரிப்பாளர் விஜய்பாண்டி போன்றோர் திறந்து வைத்தனர். அதனை தொடர்ந்து நடன நிகழ்ச்சிகள், புதிய திரையரங்கில் படங்கள் திரையிடப்பட்டது.