ஹாங்காங்கில் உள்ள ஒரு உணவகத்தில் நடந்த இந்தச் சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அங்கே உணவு அருந்திக் கொண்டிருந்த சிறுவன் ஒருவனை, சக மாணவர்கள் ஒரு கும்பலாக சூழ்ந்து கொண்டு கடுமையாகக் கேலி செய்து சித்திரவதை செய்துள்ளது. அந்தச் சிறுவன் பயத்தில் செய்வதறியாது திகைத்து நின்றுகொண்டிருந்தான்.
அங்கிருந்த சக வாடிக்கையாளர்கள் இதைப் பார்த்தும் கண்டு கொள்ளாமல் கடந்து சென்ற நிலையில், வயதான முதியவர் ஒருவர் திடீரென அந்த இடத்திற்கு வந்தார். சிறுவனைச் சுற்றி நின்று மிரட்டிக்கொண்டிருந்த அந்தச் சிறுவர் கும்பலைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட அவர், அவர்களைத் தடுத்து நிறுத்தி ஆவேசமாகச் சாடினார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அவர், அந்த இம்சை செய்த கும்பலை அடித்து விரட்டியதோடு, சிறுவனைத் தற்காத்துக்கொள்ள உதவினார்.
香港のマクドナルド。
虐められてる少年を目撃した老人がいじめっ子をどつく!! pic.twitter.com/j3OMmk0JPb— funny videos🕶️ (@miliondouga) July 15, 2026
“>
முதியவரின் இந்த வீரமான செயல் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் பரவி வரும் நிலையில், “இந்த வயதிலும் இவ்வளவு துணிச்சலா?”, “சரியான பாடம் புகட்டியுள்ளார் பெரியவர்” என நெட்டிசன்கள் முதியவருக்கு வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.
