கனடா நாட்டில் இந்தியர்கள் மற்றும் இந்து கோவில்களின் மீது தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக கனடா நாட்டில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அதிக அளவில் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு இந்தியாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கனடா நாட்டில் மிசிசுகா நகரில் ராமர் கோவிலை காலத்தால் ஆதரவாளர்கள் அவமதிக்கும்படி அதன் சுவற்றில் இந்தியா, பிரதமர் மோடிக்கு எதிராகவும் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதிக்கு ஆதரவாகவும் கருத்துக்களை எழுதி உள்ளனர். மேலும் இந்தியா ஒழிக, பிஹிந்திரவாலி ஒரு போராளி, மோடியை பயங்கரவாதி எனவும் எழுதப்பட்டிருந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.