பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தை அடுத்து துருக்கி மற்றும் சிரியாவில் நீர் வாயிலாக தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பானது தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக அந்த அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய இயக்குனர் குளூஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

“தண்ணீர் மற்றும் சுகாதார அமைப்பில் கடும் சேதத்தை நிலநடுக்கம் ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக தொற்று நோய்கள், நீர்வழிநோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த 100 வருடங்களில் ஐரோப்பா சந்தித்துள்ள மாபெரும் இயற்கை பேரழிவு இந்த நிலநடுக்கம்” என்று அவர் தெரிவித்துள்ளார்