பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருவதால் அத்தியாவசிய பொருள்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானில் கடந்த வருடம் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு நாட்டின் நிலைமையை மேலும் சிக்கலாகியது. ரொட்டி,பால் பொருட்கள் மற்றும் கோதுமை உள்ளிட்ட மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தானில் சில்லறை விற்பனையில் ஒரு லிட்டர் பாலின் விலை 190 ரூபாயிலிருந்து 210 ரூபாயாக உயர்ந்துள்ளது. கோடி கறி ஒரு கிலோ 650 ரூபாய் இருந்து 780 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இறைச்சி விலை கிலோவுக்கு ஆயிரம் முதல் ஆயிரத்து நூறு வரை உயர்ந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பாகிஸ்தான் அரசு கடன் பெறுவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்ததால் அத்தியாவசிய பொருட்களின் விலை இவ்வாறு உயர்ந்துள்ளது.