டுவிட்டரை வாங்கிய அன்றே அதன் தலைமை நிர்வாக அதிகாரிகளை அதிரடியாக நீக்கிய எலான் மஸ்க், கடந்த சில தினங்களுக்கு முன் டுவிட்டரில் தானே தலைமை செயல் அதிகாரியாக தொடர வேண்டுமா என்ற கேள்வி எழுப்பி சர்ச்சையானார். அவருக்கு பதிலளித்தவர்களில் ஏரளாமானோர் (57% பேர்) எலான் மஸ்க் தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து விலக வேண்டும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தன் செல்லமான பிளாக்கி எனும் வளர்ப்புப் பிராணியை டுவிட்டரின் புதிய சி.இ.ஓ என்று எலான் மஸ்க் அறிமுகப்படுத்தியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டுவிட்டரில் எலான் மஸ்க் பகிர்ந்திருக்கும் புகைப்படத்தில் சிஇஓ நாற்காலியில் பிளாக்கி அமர்ந்திருக்கிறது. எலான் மஸ்க், இனிமேல் எதிர்காலத்தில் நியமிக்கும் புது தலைமை செயலதிகாரிக்கு இது அவமானம் அல்லவா..? டுவிட்டரை வாங்கிய அன்றே அதன் தலைமை நிர்வாக அதிகாரிகளை எலான் மஸ்க் அதிரடியாக நீக்கினார் என்பதால், அவரது இந்த நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.