இந்தியாவில் தயாரிக்கப்படும் “இருமல் மருந்துகள்”….. மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகள் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால் இந்தியாவின் இருமல் மருந்துகளின் தரம் மீது உலக நாடுகள் இடையே அச்சம் நிலவியது. இதை சரிசெய்ய, இந்தியாவில் இருந்து இருமல் மருந்துகள் ஏற்றுமதி செய்வதற்கு முன்பு அவற்றை முறையாக பரிசோதனை செய்வது கட்டாயம், அரசின் அங்கீகாரம் பெற்ற ஆய்வுக் கூடங்கள் இதற்கு உயர் முன்னுரிமை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்தின் மாதிரியே குறிப்பிட்ட ஆய்வகங்களுக்கு அனுப்பி பரிசோதனை செய்ய வேண்டும். ஆய்வகங்கள் தரத்தை உறுதிசெய்த பிறகே இருமல் மருந்து ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Leave a Reply