பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் போட்டியில் மக்கள் ஆர்வமாக கலந்து கொள்வார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீலாத்திகுளம் கிராமத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் பிறகு போட்டிகள் நடத்தப்பட்டது. பொங்கல் பண்டிகை என்றாலே பல்வேறு இடங்களில் போட்டிகள் நடத்தப்படும்.

அந்த போட்டியில் பங்கேற்ற தம்பதிகள் தங்களது வாயில் பந்துகளை வைத்து கீழே விழாமல் பத்திரமாக கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதிக பந்துகளை சேர்த்த தம்பதிகளுக்கு கொப்பரை அண்டா பரிசாக வழங்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.