இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராகவும், சிறப்பான பயிற்சியாளராகவும் திகழ்ந்த கிரஹாம் தோர்ப் (55) காலமானார் என்ற செய்தி உலக கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
1993 முதல் 2005 வரை இங்கிலாந்து அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 82 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய தோர்ப், தனது அபாரமான பேட்டிங்கால் ரசிகர்களை மகிழ்வித்தார். 16 சதங்களை பதிவு செய்த இவர், இங்கிலாந்து அணியின் நடுத்தர வரிசையில் முக்கிய பங்கு வகித்தார்.
தனது சிறப்பான விளையாட்டு வாழ்க்கையை முடித்த பின்னர், ஆஸ்திரேலியாவில் பயிற்சியாளராக தனது பயணத்தைத் தொடங்கினார். பின்னர் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் பேட்டிங் பயிற்சியாளராக பணியாற்றினார். அவரது திறமையான பயிற்சியின் கீழ் இங்கிலாந்து அணி பல வெற்றிகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
கிரஹாம் தோர்ப்பின் மறைவு கிரிக்கெட் உலகிற்கு பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்களை தெரிவித்து வருகின்றனர்.