தமிழ்நாடு டிஎன்பிஎல் தொடர் கடந்த மாதம் 5-ம் தேதி தொடங்கிய நிலையில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டது. இந்த போட்டியில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதியது. அதன்படி ஷாருக்கான் தலைமையில் ஆன கோவை அணியும், அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணியும் மோதியது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கோவை அணியால் ஆரம்பம் முதலே  திண்டுக்கல் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறுதியில் கோவை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய திண்டுக்கல் அணி சிறப்பாக விளையாடிய நிலையில் 18.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் கோவையை வீழ்த்தி முதல் முறையாக திண்டுக்கல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.