
புதுக்கோட்டையில் கோடை வெயிலை தணிக்கும் வகையில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தல் தற்போது அடை மழை வெளுத்து வாங்கும் சமயத்தில் டீ பந்தலாக மாறியுள்ளது மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. கோடை வெயில் பாட்டி வதைத்து வந்த நிலையில் முன்னால் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுரைப்படி 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் பந்தல் அமைத்து தண்ணீர், மோர், ஐஸ்கிரீம், தர்பூசணி, குளிர்பானங்கள் வழங்கப்பட்டு வந்தன.
தற்போது மழை பெய்து வருவதால், அதிமுக இளைஞரணி சார்பில் திறக்கப்பட்டுள்ள கோடைகால தண்ணீர் பந்தலுக்கு பதில் மழைக்கு இதமாக சூடான சமோசா, தேநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிக்கு பொதுமக்களிடையே பாராட்டுக்கள் குவிந்து வண்ணம் உள்ளன.