பொங்கல் பண்டிகை முன்னிட்டு பெருநகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனை கருத்தில் கொண்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு தரப்பில் இன்று முதல் 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கக்கூடிய ஆம்னி பேருந்துகளில் வழக்கத்திற்கு மாறாக கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால்  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 1800 4256 151, 044 2474 9002, 044 26 28 0445, 044 26 28 16 11 என்ற எண்களில் புகார் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக அரசின் சிறப்பு பேருந்து குறித்த தகவல்களை தெரிந்து கொள்வதற்கு மேலும் அது குறித்து புகார் அளிப்பதற்கு 94 45014450, 94 45 01 44 36 போன்ற இரண்டு தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.