பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் வழங்கப்படாது என்று பள்ளி கல்வி இயக்ககம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.ஆண்டு ஒன்றுக்கு அவர்களுக்கு 11 மாத ஊதியம் மட்டுமே வழங்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மே மாதத்தில் பள்ளிகள் செயல்படாததால் ஊதியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனையுடன் தான் அவர்கள் பணியமர்த்தப்பட்டதாக விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பகுதி நேர ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.