சீனாவின் CRRC கார்ப்பரேஷன் லிமிட்டெட் தனது முதல் ஹைட்ரஜன் ரயிலை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது ஆசியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஆகும். இந்த ரயிலின் ஒரு ஹைட்ரஜன் டேங்க் 600 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். இந்த ரயில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.

இந்த ரயில் Fuxing அதிவேக இயங்குதளத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது ஆகும். இந்த ரயிலின் இயக்கமானது டீசல் ரயில் எஞ்ஜின் உடன் ஒப்பிடும்போது கார்பன் உமிழ்வை வருடத்திற்கு 10 டன்கள் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக உலகின் முதல் ஹைட்ரஜன் ரயிலை ஜெர்மனி அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.