தமிழ்நாடு முழுவதுமுள்ள Tasmac கடைகளை மூட ஆகஸ்ட் 15 வரை அரசுக்கு கெடு கொடுக்கிறோமென புதிய தமிழகம் கட்சி தலைவர் Dr கிருஷ்ணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.  தென்காசி மாவட்டம் புளியங்குடியில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ‘நாங்கள் ஒரு விஷயத்தை தொட்டுவிட்டு அதை பாதியில் அப்படியே விட்டுச் சென்றதாக வரலாறு கிடையாது. எவ்வளவு சீக்கிரத்தில் கடைகளை மூட முடியுமோ மூடிவிடுங்கள். இல்லையென்றால் நடப்பதற்கு நான் பொறுப்பல்ல’ என்றார்.