தமிழகத்தில் திறன் போட்டிகள் 2023 ஆம் ஆண்டில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் 22 வயதிற்குள்ளான இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொறியியல் / கலை & அறிவியல் / மருத்துவம் மற்றும் அது சார்ந்த துறைகள் / பாலிடெக்னிக் / ஐடிஐ / பள்ளி மாணவர்கள், 1991 இன் தொழிற்பயிற்சிச் சட்டத்தின் கீழ் தொழில்களில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள், தொழில்துறை ஊழியர்கள் ஆகியோர் இதற்கு முன்பதிவு செய்யலாம்.

இதற்கு விருப்பமுள்ளவர்கள் www.naanmudhalvan.tn.gov.in/tnskills/ என்ற இணையதளத்தில் வருகின்ற ஜூன் 30-ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.