சென்னையில் உள்ள கண்ணகி நகர் பகுதியில் உமாபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கொலை முயற்சி, கஞ்சா விற்பனை உட்பட 9 வழக்குகள் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஏற்பட்ட தகராறில் தினேஷ், சின்னா ஆகியோரை வெட்டியுள்ளார். இது தொடர்பாக கண்ணகி நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை செய்ய 2 போலீஸ்காரர்கள் சென்று உமாபதியை நேரில் வருமாறு காவல்துறையினர் அழைத்தனர். அப்போது உமாபதி மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து போலீஸ்காரர்களை கல்லால் அடித்தும், கைகளால் அடித்தும் தாக்கினா=ர். அதோடு அவர்களை பீர் பாட்டிலால் குத்தவும் முயற்சி செய்தனர். காயமடைந்த 2 போலீஸ்காரர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் தப்பி ஓடிய உமாபதி மற்றும் அவருடைய நண்பர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகிறார்கள்.