விழுப்புரம் மாவட்டத்தில் வேடம்பட்டி என்ற பகுதி உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான மருத்துவ கழிவு அரவைத் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து இன்று அதிகாலை 1 மணியளவில் நச்சுக்காற்று வெளியேறியுள்ளது.

இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த தொழிற்சாலையை மூட வலியுறுத்தி முன்னதாக அந்த பகுதி மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.