தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்துள்ள ஒரு பேட்டி அதிமுக வட்டாரத்தில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அப்பேட்டியில் அண்ணாமலை பேசியதாவது “தமிழ்நாட்டில் பல்வேறு ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு உள்ளனர். அதன் காரணமாகதான் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருக்கிறது. நாட்டின் ஊழல்மிகுந்த மாநிலங்களில் தமிழ்நாட்டிற்கு முதலிடம் என்று கூட சொல்வேன்” என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னை தி.நகரிலுள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் பேட்டி அளித்தபோது “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி பேசவோ எதிர்க்கவோ அதிமுகவில் யாருக்கும் தகுதி இல்லை. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றபட்டிருப்பது கண்டனத்துக்குரியது” என்று தெரிவித்தார்.