இளைஞன் ஒருவர் இரக்கம் இல்லாமல் மயிலின் இறகுகளை பறிக்கும் வீடியோ சமூகஊடகங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. வீடியோவில் அவர் சிரித்துக்கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. மயில் இறகுகளை பறிக்கும்போது அந்த இளைஞர் சிரித்துக்கொண்டிருக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவிய நிலையில், நெட்டிசன்கள் பலவித கமெண்ட்களை கொடுத்து வருகின்றார். மேலும் இந்த வீடியோ வைரலானதை அடுத்து இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அவரைத் தேடி வருகின்றனர்.