கோர்ன் ஃபெர்ரி என்ற அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் 2023ம் ஆண்டு இந்தியர்களின் சம்பளம் உயரும் என தெரியவந்துள்ளது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் இந்தியர்களின் சம்பளம் உயரும் என்றும், இந்திய நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களின் சம்பளத்தை சராசரியாக 9.8% உயர்த்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் அதிக திறன் உள்ளவர்களுக்கு நிச்சயம் அதிக சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும், சிறப்பான திறன் உடைய ஊழியர்களுக்கு 15% முதல் 30% வரை சம்பள உயர்வு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.