ரயில்வே டிக்கெட் முன் பதிவு ஏழை, எளியோருக்கு எட்டாக் கனியாக இருகிறது. இப்போது அந்த சிரமங்கள் எதுவும் இன்றி நீங்கள் சாதாரண டிக்கெட்டை எடுத்துக்கொண்டு, படுக்கை வசதி கொண்ட இருக்கைகளில் பயணிக்கலாம். அவ்வாறு பயணம் செய்தால் டிடிஆர் அபராதம் போட்டுவிடுவாரே என யோசிக்க வேண்டாம். இனி நீங்கள் 1 ரூபாய் கூட அதிகம் கொடுக்காமல், சாதாரண டிக்கெட் விலையில் ஸ்லீப்பர் கிளாஸில் பயணிக்கலாம். அதற்குரிய அறிவிப்பை ரயில்வேதுறை வெளியிட்டு உள்ளது. வயதானவர்களும், வசதி வாய்ப்பற்றவர்களும், முதியோர்களும் இனி இப்படி பயணிக்கலாம்.

80%-க்கும் குறைவான பயணிகளுடன் செல்லும் ஸ்லீப்பர் பெட்டிகளுடன் இயங்கும் அனைத்து ரயில்களின் விபரத்தையும் ரயில்வே பிரிவுகளின் நிர்வாகத்திடம் ரயில்வே வாரியம் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஏழை-எளிய பயணிகள் பயணம் செய்வதில் எந்த பிரச்சனையும் ஏற்படாத அடிப்படையில் அனைத்து ஸ்லீப்பர் பெட்டிகளையும் பொது பெட்டிகளாக மாற்ற ரயில்வே பரிசீலித்து வருகிறது.

இதற்கிடையில் ஏசி பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ரயில்வே முடிவுசெய்துள்ளது. இது தவிர்த்து பொது டிக்கெட்டில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கிறது. இதனை கருதி ஸ்லீப்பர் கோச்சுக்கு பொதுப் பெட்டி அந்தஸ்தை வழங்குவதற்கு ரயில்வே முடிவுசெய்துள்ளது. இந்த பெட்டிகளுக்கு வெளியே முன் பதிவு செய்யப்படாதது எழுதப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது. எனினும் இப்பெட்டிகளில் மிடில் பெர்த் திறக்க அனுமதிக்கப்படாது என ரயில்வே தெரிவித்துள்ளது.