
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி-யுமான ராகுல் காந்தி சமீபத்தில் கன்னியாகுமரி முதல் ஜம்மு – காஷ்மீர் வரை ஒற்றுமை நடைபயணத்தை முடித்துள்ளார். இந்நிலையில் தற்போது தனிப்பட்ட முறையில் காஷ்மீரில் உள்ள குல்மார்க் பகுதிக்கு சென்றுள்ளார்.
RaGa 💓🔥 pic.twitter.com/WUfzeK9o52
— Srinivas BV (@srinivasiyc) February 19, 2023
அங்கு ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியுடன் பனி சறுக்கு செய்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி.ஸ்ரீனிவாஸ் பகிர்ந்துள்ளார். அதில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா இருவரும் மாறி மாறி பனிசறுக்கு வாகனத்தை ஓட்டும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.