இந்தியாவில் தபால் அலுவலகங்களில் பல்வேறு விதமான சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. அந்த வகையில் சிறு சேமிப்பு திட்டமான தபால் நிலைய சேமிப்பு கணக்கு திட்டமும் ஒரு சிறந்த திட்டமாகும். இந்த திட்டத்தின் குறைந்தபட்ச முதலீடு தொகை 500 ரூபாய் ஆகும். இந்த திட்டத்தில் ஒரு வருடத்திற்கு 4 சதவீதம் வரை வட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்தில் அருகில் உள்ள தபால் நிலையங்களுக்கு நேரில் சென்றோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ பதிவு செய்து இணைந்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் சேர்வதற்கு ஆதார் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் மொபைல் நம்பர் போன்ற விவரங்கள் தேவைப்படும். இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதி வரை உங்கள் கணக்கில் உள்ள மினிமம் பேலன்ஸ் தொகையை கருத்தில் கொண்டு வட்டி கணக்கிடப்படும். ஒருவேளை மினிமம் பேலன்ஸ் தொகை கணக்கில் இல்லாவிடில் அதற்கு வட்டி கிடைக்காது. இந்த திட்டத்தின் வட்டி ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் வாடிக்கையாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும் ஒரு வேலை நீங்கள் கணக்கை மூடுவதற்கு முடிவு செய்தாலும் அது வரையிலான தொகை உங்களுக்கு கிடைக்கும்.