சென்னை மெரினா கடற்கரையில் பானி பூரி, சோளம் சாப்பிட்டு சென்ற இளம்பெண் திடீரென
உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை சேர்ந்த மோனிஷா (24) என்ற பெண் மெரினா கடற்கரையில் பானிபூரி வாங்கி சாப்பிட்டுள்ளார். அதனையடுத்து பறக்கும் ரயிலை பிடிக்க படிக்கட்டுகளில் வேகமாக ஏறிச் சென்றுள்ளார்.

அப்போது ரயில் நிலையத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்த அவரை உடனடியாக மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர். அனால் அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.