சமீபகாலமாகவே இந்தியாவில் கொடூரமான முறையில் கொலைகள் அரங்கேறி வருகிறது. அப்படி லிவிங் டூகெதர் முறையில் வாழ்ந்து வந்த தனது காதலியை கொலை செய்து துண்டுதுண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதேபோல இன்னொரு சம்பவமும் நடந்தது. இந்த நிலையில் அசாமில் வந்தனா என்பவர், நண்பர்கள் இருவருடன் சேர்ந்து கணவர் மற்றும் மாமியாரை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் கொலை செய்துள்ளார்.
உடல் உறுப்புகளை துண்டு துண்டாக வெட்டி சில நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்து பின்னர் ஒரு பள்ளத்தாக்கில் வீசியுள்ளார். கணவர் மற்றும் மாமியாரை காணவில்லை என்று வந்தனாவே போலீசில் புகார் அளித்திருந்த நிலையில் விசாரணையில் உண்மை வெளிவந்தது.