பிரபல யூடியூபரான இர்ஃபானின் மனைவிக்கு சோழிங்கநல்லூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அப்போது அறுவை சிகிச்சை அரங்கிற்குள் சென்ற இர்ஃபான் குழந்தை பிறப்பை வீடியோவாக பதிவு செய்ததோடு, குழந்தையின் தொப்புள் கொடியை தானே வெட்டுவது போன்ற வீடியோ வெளியிட்டுள்ளார். இது தொடர்பான விசாரணை மேற்கொண்ட மருத்துவ அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது பத்து நாள் உரிமத்தை ரத்து செய்தனர். இது சம்பந்தமாக மருத்துவ நிவேதிதா மற்றும் இர்ஃபான் மீது காவல்துறையினர் புகார் அளித்தனர்.
மேலும் மருத்துவர் மீது தமிழ்நாடு மருத்துவர் கவுன்சிலியிலும் புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் சம்பந்தப்பட்ட மருத்துவர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த விவகாரத்தில் முன்னதாக இர்ஃபான் தனது உதவியாளர் மூலம் விளக்க கடிதம் வழங்கியிருந்தார். அதில் இந்த தவறுக்கு மன்னிப்பு கோருவதாகவும் எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் வெளிநாட்டில் இருப்பதாக கூறிய இர்ஃபான் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.