செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தேவராஜபுரம் பகுதியில் ராஜகுரு -அலமேலு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு யாத்திகா என்னும் மகள் இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டு யாத்திகா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார். பின்னர் காய்ச்சல் அதிகரித்ததால் பாஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த பரிசோதனை செய்து பார்த்ததில் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பதை தெரிய வந்தது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக யாத்திகா செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுமி யாத்திகா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் ஊராட்சி நிர்வாகம் முறையாக கொசு மருந்து பீலிச் பவுடர் உள்ளிட்ட சுகாதார பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததே காரணம் என்று பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் வைத்துள்ளனர்.