மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு துலா உற்சவம் சிறப்பாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் காவிரி ஆற்றங்கரையில் துலா கட்ட உற்சவம் அங்குள்ள சிவன் கோவிலில் வெகு விமரிசையாக நடைபெறும் இந்த நிலையில் அங்குள்ள காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடி வழிபடுவர். இதற்காக பல ஊர்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
இதேபோன்று இந்த ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி இந்த மகா உற்சவம் நடைபெற உள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளித்துள்ளது.. இந்த விடுமுறையை ஈடு செய்ய நவம்பர் மாதம் 23ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறையை வேலை நாளாக மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி அறிவித்துள்ளார்.