இன்றைய டிஜிட்டல் உலகில் யூடியூப் என்பது வெறும் பொழுதுபோக்குத் தளமாக மட்டுமல்லாமல், பல கோடி வருமானம் ஈட்டித்தரும் ஒரு தொழிலாகவும் மாறியுள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இணையத்திற்கு அடிமையாகியுள்ள நிலையில், பல இளைஞர்கள் வீட்டில் இருந்தபடியே பயனுள்ள வீடியோக்களைப் பதிவிட்டு லைக்ஸ் மற்றும் வியூஸ்கள் மூலம் பணம் சம்பாதிக்கின்றனர்.

பொதுவாக யூடியூப் நேரடியாகப் பணம் வழங்குவதில்லை; மாறாக, வீடியோக்களின் இடையே வரும் விளம்பரங்கள் மூலமே வருவாய் கிடைக்கிறது. 1,000 பார்வைகளுக்கு விளம்பரதாரர் தரும் தொகை மற்றும் கிரியேட்டர் பெறும் தொகை ஆகியவற்றைப் பொறுத்தே வருமானம் தீர்மானிக்கப்படுகிறது.

இந்தியாவில் 10 மில்லியன் பார்வைகளுக்குச் சராசரியாக 80,000 முதல் 2.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. எனினும், இந்தத் தொகை வீடியோவின் வகை, நீளம் மற்றும் பார்வையாளர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பொறுத்து மாறுபடும்.

குறிப்பாக நிதி, தொழில்நுட்பம் மற்றும் கல்வி சார்ந்த வீடியோக்களுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்கும். விளம்பரங்கள் தவிர்த்து, பிராண்ட் ஒப்பந்தங்கள் மற்றும் ஸ்பான்சர்ஷிப்கள் மூலமே யூடியூப்பர்கள் பெரும் பகுதியைச் சம்பாதிக்கின்றனர்.

முறையான கன்டென்ட் மற்றும் சரியான புரிதல் இருந்தால், யாராலும் இந்தத் துறையில் சாதிக்க முடியும்.