
சென்னையில் உள்ள புரசைவாக்கத்தில் உள்ள ஒரு விடுதியில் 23 வயது பட்டதாரி பெண் ஒருவர் தங்கி வேலை தேடி வருகிறார். இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக ஒரு வணிக வளாகத்துக்கு சென்றுள்ளார். அப்போது வீரா டாக் டபுள் எக்ஸ் என்ற youtube சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அவர் காதல் தொடர்பாக இரட்டை அர்த்த வசனங்களுடன் ஜாலியாக பேசியுள்ளார். அவர் பேசிய வீடியோ instagram மற்றும் youtube-களில் வைரலான நிலையில் அந்த பெண் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். அதாவது அந்த பெண்ணுக்கு பெற்றோர் இல்லாததால் சகோதரரின் பராமரிப்பில் இருந்துள்ளார்.
தான் பேசிய விஷயம் சகோதரர் மற்றும் உறவினர்களுக்கு தெரிந்தால் என்ன ஆகுமோ என்ற பயத்தில் அவர் விடுதியில் எலிமருதை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவரை விடுதியில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அந்தப் பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினார். அப்போது தன்னை கட்டாயப்படுத்தி வீடியோ எடுத்ததாகவும் தன்னுடைய அனுமதி இல்லாமல் பேட்டியை வெளியில் விடமாட்டோம் எனக் கூறிவிட்டு வீடியோவை வெளியிட்டதாக கூறினார். மேலும் அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் கீழ்ப்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ராம், யோகராஜ் மற்றும் ஸ்வேதா ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.