செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி,  திருநெல்வேலி மாநகராட்சினுடைய எல்லைக்குள் 2 இளைஞர்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றவர்களை ஆறு பேர் கொண்ட ஒரு கும்பல் தாக்கியதோடு மட்டுமின்றி,  அவர்கள் மீது சிறுநீர் கழித்து அவர்கள் அவமானப் படுத்தப்பட்டு இருக்கிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் சமூக நீதி பேசப்படுகிறதே தவிர….  அது செயலுக்கு வருகின்ற போது செயலற்றுப் போய்விடுகிறது.

எனவே இது போன்று தொடர்ந்து தென் தமிழகத்தில் கடந்த இரண்டு,  மூன்று மாதங்களுக்கு முன்பாக தான் நாங்குனேரியில் மாணவர்கள்….  ஒரு பள்ளி மாணவர் வீடு புகுந்து தாக்கப்பட்டார். அதற்குப் பிறகு கடுகுமலையிலேயே சம்பவம் நடந்தது.  அதே போன்று வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில கழிவு கலக்கப்பட்டது. இப்பொழுது   சிறுநீர் கழிக்கக்கூடிய அளவுக்கு நிலைமை தமிழகத்தில் போய்க் கொண்டிருக்கிறது.

ஆயிரக்கணக்கான இளைஞர்கள்… லட்சக்கணக்கான இளைஞர்கள்… தமிழர்களாக ஒன்று பட வேண்டும்.  சாதாரணமான ஜல்லிக்கட்டுக்கு லட்சக்கணக்கானவர்கள் திரண்டவர்கள்,  ஏன் சமூகத்தில் இன்னும் நிலவக்கூடிய இந்தப் போன்ற அவலங்களை கண்டிப்பதற்கு ஏன் திரள மறுக்கிறார்கள். அவர்களுடைய எந்த உணர்வுகள் இதைத் கண்டிப்பதற்கு தடுக்கிறது  என்பது தான் என்னுடைய கேள்வி.

வெறுமனே இவர்கள் சமூக நீதி பேசுகிறார்களா ? வெறுமனே தமிழுணர்வு பேசுகிறார்களா ? அப்படி என்று சொன்னால் இவர்கள் எல்லாம் போலியானவர்களா ? என்பதுதான் இன்று இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு எழுப்ப கூடிய கேள்வி. இல்லை என்று சொன்னால்,  நான் ஜல்லிக்கட்டு நடத்துகின்ற பொழுது ஜல்லிக்கட்டு சாதிக்கட்டு என்று சொன்னது உண்மையாகி போய்விடும் என தெரிவித்தார்.