விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தாயில்பட்டி பேருந்து நிறுத்தத்தில் வெம்பக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் தீவிர வாகன சோதனை ஏற்பட்டுள்ளார். அப்போது சந்தேகப்படும் படியாக சாக்கு பைகளுடன் வந்த நபரை வெற்றி முருகன் பிடித்து விசாரித்துள்ளார். அந்த விசாரணையில் அவர் கலைஞர் காலனியை சேர்ந்த சின்னப்பராஜ் என்பதும், அனுமதி இன்றி தயார் செய்யப்பட்ட 60 கிலோ சோல்சா வெடிகள் மற்றும் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களை கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்து போலீசார் சின்னப்பராஜை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 60 கிலோ பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சாக்கு பைகளுடன் வந்த நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!
Related Posts
3 வயது சிறுவன் கொடூர கொலை… போலீசை கண்டதும் தலைதெறிக்க ஓடிய பக்கத்து வீட்டு பெண்… பதற வைக்கும் பகிர் சம்பவம்..!!
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே ஆத்துக்குறிச்சியில் விக்னேஷ் ரம்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகளில் இளைய மகனுக்கு 3 வயது ஆகிறது. நேற்று காலை ரம்யா தனது 3 வயது மகனை அங்கன்வாடிக்கு அழைத்து செல்ல தேடியுள்ளார்.…
Read moreதமிழக அரசு இதை கட்டுப்படுத்த தவறிவிட்டது…. சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி…!!!
சென்னை மாவட்டம் பெரும்பாக்கத்தில் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.…
Read more