தர்மபுரி மாவட்டத்திலுள்ள நெருப்பூர் காட்டுக்கொட்டாய் கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சம்பு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் விஷாலனி என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக மணி பிரிந்து சென்று விட்டார். இதனால் சம்பு கூலி வேலைக்கு சென்று தனது பிள்ளைகளைப் படிக்க வைத்தார். பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டிலிருந்த விஷாலனி ரமேஷ் என்பவரை காதலித்தார்.

கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ரமேஷ் விஷாலனியை குழந்தை திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதற்கிடையே விஷாலனியும் ரமேஷும் சேர்ந்து வாழ்ந்தனர். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனை விஷாலனி தனது தாயிடம் செல்போன் மூலம் கூறியுள்ளார்.

நேற்று விஷாலனியின் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் சம்புவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறியுள்ளனர். உடனடியாக சம்பு தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீஸ் விஷாலனி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை அடித்து கொலை செய்தார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.