புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் சமாதானப்புரத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருக்கு கௌசல்யா(25) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு நித்யஸ்ரீ(6), தசா ஸ்ரீ(4) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சரவணன் அடிக்கடி வெளியூர் சென்ற வருவதால் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது.

கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த கௌசல்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் கௌசல்யாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் கௌசல்யா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.