கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அம்மாண்டிவிளை கட்டைக்காடு பகுதியில் கூலி வேலை பார்க்கும் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலையரசன்(28), கவி(25) என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் கவித் பிகாம் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். ஆனால் சரியான வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த கவித் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கவித்தின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.