திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் காமராஜ் நகரில் நாகராணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜி.நடுபட்டியில் இருக்கும் அரசு ஆரம்பப்பள்ளியில் சத்துணவு ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது கணவரை விட்டு பிரிந்து மகன் மணிகண்டன், மகள் மாசிலாமணியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நாகராணி தனது வீட்டின் பின்புறம் மர்மமான முறையில் உடலில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். அவரை யாரோ கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நாகராணியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் விட்டல்நாயக்கன் பட்டியை சேர்ந்த முருகேசன் என்பவர் ராணியை கொலை செய்தது தெரியவந்தது. அதாவது மாசிலாமணிக்கும் முருகேசனுக்கும் தகாத உறவு இருந்தது. இதனை ராணி கண்டித்ததால் கோபத்தில் முருகேசன், ராணியை கொலை செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.