தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் தலைவர் விஜய் திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாகப் பயணம் மேற்கொண்டார். அவரைப் காண்பதற்காக வழிநெடுகிலும் ஏராளமான தொண்டர்கள் திரண்டனர்.

இதையடுத்து கூட்டத்தில் உரையாற்றிய விஜய், மத்திய அரசு மற்றும் அமலாக்கத்துறையைச் சுட்டிக்காட்டி மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “டெல்லி, டெல்லி எனப் பேசுகின்றனர், ஆனால் அமலாக்கத்துறை சோதனை என்று வந்துவிட்டால் வெள்ளைக்கொடி காட்டுகின்றனர்” என்று அவர் ஆவேசமாகப் பேசினார்.