இஸ்ரேலின் வட எல்லை பகுதிகளை ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தியதில் அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர். அவர்களை மீண்டும் இஸ்ரேலில் குடியமர்த்துவது தான் இஸ்ரேலின் நோக்கம் என இஸ்ரேல் தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பின் மீதும் காசா பகுதியில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் இதுவரை 3800-க்கும் மேற்பட்ட லெபனான் பகுதி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனை அடுத்து ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர்.
இந்தப் போரை நிறுத்தும் நோக்கில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐ.நா முயற்சிகள் செய்து வந்துள்ளனர். இதன்படி சென்ற மாதம் 27ஆம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் 60 நாட்களுக்கு போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது. லிட்டானி ஆற்றின் வடக்கு பகுதிக்கு ஹிஸ்புல்லா அமைப்பினர் பின்வாங்க வேண்டும். இஸ்ரேல் படை தனது எல்லைக்கு மீண்டும் திரும்ப வேண்டும். இரண்டு நாட்டின் எல்லைப் பகுதியை ஐ.நா அமைதிப்படை கண்காணிக்கும் என கையெழுத்தானது.
இந்த நிலையில் ஒப்பந்தம் செய்யப்பட்ட இரண்டு நாட்களில் இஸ்ரேல் லெபனான் மீது திடீர் தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் கூறியதாவது, ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலை தாக்க தயாராக இருந்தனர் இதனால் லெபானன் மீது தாக்குதல் நடைபெற்றது எனக் கூறியுள்ளனர். ஆனால் ஹிஸ்புல்லா அமைப்பு எந்த தாக்குதலுக்கும் தயாராக இல்லை என கூறியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து ஈரான், லெபானியர்கள் மீண்டும் தங்கள் பகுதிக்கு திரும்பி வருவதை தடுக்கவே இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.