இந்த உலகில் பல்வேறு இனத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்த மக்களும் வெவ்வேறு விதமான கலாச்சாரத்தை கொண்டுள்ளனர். அந்த வகையில் ஆப்பிரிக்காவில் வாழும் சில பழங்குடியின மக்கள் வித்தியாசமான பழக்க வழக்கங்களை இன்றளவும் பின்பற்றி வருகின்றனர். அதாவது இந்த மக்கள் மலாவி என்ற பகுதியில் வசித்து வருகின்றனர்.
இவர்களின் புனித தளத்திற்கு இறந்தவரின் உடலை கொண்டு சென்று சடலத்தின் தலையை வெட்டுகின்றனர். அதன் பின், அந்த உடலின் உட்பகுதியை நீரால் கழுவுகின்றனர். பின்னர் இதனை சுட்டு அனைவரும் அமர்ந்து, அதை சாப்பிடும் போது இறந்தவர்களுக்காக பாடல் பாடி அழுது கொண்டே ரசித்து சாப்பிடுகின்றனர். இது இறந்தவர்களுக்கு அவர்கள் செய்யும் மரியாதையாக அவர்கள் பார்க்கின்றனர். சடலத்தை கழுவிய நீரையும் சமையல் செய்து உண்கின்றனர்.
அதோடு ஆண்கள் தங்களுக்கான மனைவியை அடைவதற்கு ஒரு சடங்கு நடத்தப்படுகிறது. அதாவது ஒரு ஆணின் பிறப்புறுப்பில் சாட்டையால் அடிக்கின்றனர். அந்த வலியை யார் தாங்குகிறார்களோ அவர்களுக்குத்தான் பெண் இல்லை. அதாவது அவர்களுக்கு மனைவி கிடையாது. இந்த வகையில் தான் மணமகனின் ஆண்மை சோதிக்கப்படுகிறது. சில நேரங்களில் மரணமும் ஏற்படுகிறது.
எத்தியோப்பியாவின் ஹாமர் என்ற பழங்குடியின மக்கள் தங்களுக்கு திருமணம் வேண்டுமென்றால், ஆண்கள் ஆடையின்றி வானத்தைப் பார்த்து படுக்க வேண்டும். அதன் பின் அவர்கள் மேல் காளைகளை ஓட விடுகின்றனர். தென் சூடான் மற்றும் தென்மேற்கு எத்தியோப்பியா பகுதியில் வாழும் சுர்மா பழங்குடியின மக்களில், பெண்களின் தோற்றம் வித்தியாசமாக இருக்கும். ஏனெனில் அந்தப் பெண்கள் பூப்படையும்போது, கீழ் உதட்டில் மூலிகை பொருள்கள் மற்றும் களிமண்ணால் செய்யப்படும் தகுந்த ஒன்று பொருத்தப்படுகிறது இது அவர்கள் மிகவும் அழகாக பார்க்கின்றனர்.