அமெரிக்க அதிபர் ஆன ஜோ பைடன் வரும் ஜனவரியோடு அவரது பதவிக்காலம் முடிவடைகிறது. இந்த நிலையில் ஜோ பைடன் தன் பதவியில் இருக்கும் போது தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவசர அவசரமாக முக்கிய முடிவுகளை செயல்படுத்துகிறார். இந்த நிலையில் தற்போது ரஷ்யா மீது பாலிஸ்டிக் ஏவுகணை பயன்படுத்த உக்கிரனுக்கு அனுமதி வழங்கியது மற்றும் கிரிமினல் வழக்கில் குற்றவாளியான ஜோ பைடன் மகனான ஹன்டர் பைடனுக்கு பொது மன்னிப்பு வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
பொது மன்னிப்பு வழங்கிய ஹண்டர் பைடன்(54) சட்டத்தை மீறி துப்பாக்கி வைத்திருந்த வழக்கு, 10 ஆண்டுகளாக 1.4 மில்லியன் டாலர் வரி எய்ப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர். ஆனால் ஜோ பைடன் தனது மகனுக்கு பொது மன்னிப்பு வழங்க மாட்டேன் என கூறி வந்த நிலையில் திடீரென தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனது மகனை பொது மன்னிப்பு அளித்து விடுவித்துள்ளார். இதற்கு எதிராக வருகிற ஜனவரியில் அதிபராக பதவி ஏற்க உள்ள டிரம்ப் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, ஹன்டருக்கு பொது மன்னிப்பு வழங்கியது போல் கடந்த 2021 இல் வெள்ளை மாளிகையில் ஆட்சியை இழந்த போது தனக்கு ஆதரவாக போராடிய போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார். டிரம்ப் பதவியேற்ற பின் அவர் தான் மேல் உள்ள பாலியல் குற்றச்சாட்டு உட்பட பல வழக்குகளில் இருந்து தன்னைத்தானே பொது மன்னிப்பு வழங்கிக் கொள்வார் என ஒரு தகவலும் பரவி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.