செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், கர்நாடகாவில் 2018 ஆம் ஆண்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தார்கள். இப்போது அதனை அறிவிக்க  கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அவர்கள்  தயார் ஆகி கொண்டு இருக்கின்றார். ஒரிசாவிலே ஜூன் ஒன்றாம்  தேதியிலிருந்து ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள். ராஜஸ்தான் மாநிலத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு அறிவித்து இருக்கிறார்கள்.

ஆந்திராவிலே நவம்பர் 15இல் இருந்து ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்று அறிவித்திருக்கிறார்கள். தெலுங்கானாவில் அறிவித்திருக்கிறார்கள். அப்போது சமூக நீதி  பேசும் தமிழ்நாட்டில் ஏன் இன்னும் அறிவிக்கவில்லை ? தந்தை பெரியார் வழியை பின்பற்றுகின்றோம் என்று சொல்லுகின்ற தி.மு.க அரசு இன்னும் என்ன தயக்கம் உங்களுக்கு ? 2012இல் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்குகிறது. உச்சநிதிமன்ற தீர்ப்பிலே தமிழ்நாட்டிலே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு பாதுகாக்க வேண்டும் என்றால் ? தரவுகளை வெளியிடுங்கள், சேகரிங்கள், கணக்கெடுப்பு நடத்தி எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். இல்லை 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை நாங்கள் ரத்து செய்வோம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு 2012 இல் கொடுத்தார்கள்.

அதற்கு முன்பு 2011ல் மருத்துவர் ஐயா கலைஞர் அவர்களை சந்தித்தார். 2012 ல் ஜெயலலிதா அம்மையாரை சந்தித்தார். பின்பு எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும் சந்தித்தார். தமிழ்நாட்டில் 69 விழுக்காடுஇடஒதுக்கீடு பாதுகாக்க வேண்டும் என்றால் ?  முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டிலே ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்ற அறிவிப்பு உடனடியாக வரவேண்டும் என தெரிவித்தார்.