சீனாவில் உள்ள ஷான்டான் மாகாணத்தில் விலங்குகள் பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவில் உள்ள கழுதைகளுக்கு கருப்பு வெள்ளை நிறத்தில் கோடுகள் வரைந்து வரிக்குதிரைகள் போல மாற்றியுள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து பூங்கா ஊழியர்கள் கூறியதாவது, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கவும். பூங்காவிற்கு வருபவர்களை ஈர்க்கும் வகையில் அமையவும் வரையப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் கடும் பனிப்பொழிவு இருப்பதால் விலங்குகள் பாதிக்காத வண்ணம் வர்ணம் பூசப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்த புகைப்படங்களுக்கு பல்வேறு இணையவாசிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விலங்குகளை நச்சுத்தன்மை வாய்ந்த பெயிண்டுகளால் வர்ணம் பூசுவதால் அவைகளுக்கு பாதிப்புகள் ஏற்படும் எனவும், விலங்குகளை துன்புறுத்துவது தவறான செயல் எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதே போல், ஏற்கனவே சீனாவில்  விலங்குகள் பூங்காவில் நாய் குட்டிகளுக்கு புலிகள் போலவும், பாண்டா கரடிகள் போலவும் பெயிண்ட் அடிக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி கடும் எதிர்ப்பை பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.