கிட்டத்தட்ட ஒரு வார காலமாகவே களத்திலிருந்து போர்ட்ல போயி பணி செஞ்சுட்டு இருக்கீங்க. இருந்தாலும் உங்களுடைய உடல் சோர்வு தெரியுது. என்ற கேள்விக்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,

இதெல்லாம் ஒரு சோர்வா ? தேர்தல் நேரத்தில் நான் உழைச்சத விடவா இப்போ உழைக்கிறேன். அப்படி வெயில் நின்னு,  சட்ட சட்டையா  உரியும்.  கையெல்லாம் எரியும்… சோப்பு போட்டு முகம் கழுவ முடியாது, அப்படி காந்தும், அப்படி பிஞ்சு போற அளவுக்கு இருந்தது. அப்பவே அவ்வளவு கஷ்டப்பட்டேன். அதைவிடவா இதெல்லாம் கஷ்டம்… அதெல்லாம் ஒன்னும் இல்ல.

வெள்ள நிவாரண பணியில் தமிழக அரசு நல்லா செயல்பட்டு உள்ளதாக ஒன்றிய ஆய்வு குழு தெரிவித்துள்ளது. அதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,

இதுக்கு நான் என்ன சொல்லணும்னு நினைக்கிறீங்க. 2015 போல பேரிடரா ஒண்ணும் உயிர் சேதம் வரல அப்படிங்கறது நாம் ஒத்துக்கணும்.   செம்பரம்பாக்கம் ஏரியை அம்மா நள்ளிரவில் மக்கள் உறங்கப் போற  நேரத்துல விழிப்புணர்வு இல்லாமல் திறந்து விட்டதுல பெரிய இடர் வந்துருச்சு. அது மாதிரி இதுல இல்ல. முன்னறிவிப்பு எச்சரிக்கையா மக்கள் கொஞ்சம் கவனமா இருந்துட்டாங்க. அது தானே ஒழிய,

சரி பேரிடரில்  தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டுச்சின்னு ஒன்றிய அரசு பாராட்டுகின்றது என்றால் நான் வரவேற்கிறேன். ஆனால் தமிழ்நாடு அரசு கேட்ட தொகையை அது கொடுத்துருச்சுன்னா….  அதை இன்னும் பாராட்டலாம். நிவாரணத்துக்கு இவ்வளவு தொகை தேவைப்படுது…  மக்களுக்கு இழப்பீடு கொடுத்து சரி பண்றதுக்கு கேக்குதில்ல… அதை கொடுத்திருச்சுன்னா… உளமார் அவங்க சொல்றது சரின்னு பாராட்டலாம்…  வெறும் வார்த்தையில் சொல்லி என்ன பிரயோஜனம் ? என தெரிவித்தார்.