நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வரலாறு காணாத மழை பாதிப்புகளை சந்தித்துள்ளது.  மக்களுடைய இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய உடைமைகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு வங்கி கணக்கு மூலம் ரூ.6,000 செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரேஷன் கடைகளில் வெள்ள நிவாரண நிதி ரூ.6000 பெறுவதற்கான டோக்கன் மட்டும் தந்துவிட்டு, பணம் பெற்றதாக செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதேபோல், வெள்ள நிவாரண விண்ணப்பம் வழங்காமல் ரேஷன் கடை ஊழியர்கள் அலைக்கழிப்பதாகவும், அரசாணையில் விண்ணப்பிக்க கடைசி தேதி குறிப்பிடாத நிலையிலும், தேதி முடிந்துவிட்டது எனக் கூறி விண்ணப்பங்களை தர மாறுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.