நெல்லை மாவட்டத்தில் பெய்த தொடர்கள் கனமழை காரணமாக மாவட்ட முழுவதும் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக தாமிரபரணி ஆற்றிற்கு  ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணி வெள்ளம் சென்ற காரணத்தால் கரையோர பகுதிகள் பெருமளவு பாதிப்புக்குள்ளாக்கியது. தண்ணீர் படிப்படியாக வடிய தொடங்கிய நிலையில், பல்வேறு இடங்களில் நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர் தலைமையில் ஒரு குழுவானது அமைக்கப்பட்டு,  வெள்ள பாதிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணியானது  கடந்த ஒரு வாரமாக நடந்து  வருகிறது.

இந்த நிலையில் மாவட்டத்தின் புறநகர் மற்றும் மாநகரப் பகுதிகளில்   கணக்கெடுப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ பட்டியலை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். நேற்று  மாலை வரை எடுக்கப்பட்ட பட்டியலின்படி மாவட்டம் முழுவதும் 14 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தவிர மாவட்டத்தில் சுமார் 67 மாடுகள் உயிருள்ளதாகவும், 1164 வீடுகள் இடிந்து சேதமடைந்திருப்பதாகவும் கண்டறியப்பட்டிருக்கிறது. அதேபோல சுமார் 504 ஆடுகளும்,  சுமார் 135 கன்றுகளும் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர மாவட்ட முழுவதும் 28 ஆயிரத்து 392 கோழிகள் உயிரிழந்திருப்பதாக நேற்று மாலை வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கணக்கெடுப்பு பணியானது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, இன்னும் முடிவடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை சுமார் 2 கோடியை 87 லட்சத்து 7700 ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும்,  அதற்காக இந்த கணக்கெடுப்பணியானது நடைபெற்று இருப்பதாகவும்,

முதற்கட்டமாக இன்று இளைஞர் மற்றும் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் 21 பயனாளிகளுக்கு சுமார் 58 லட்சத்தி 14 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிகள் என்பது முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது.  அடுத்தடுத்து தொடர்ந்து பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு  நிவாரண உதவிகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாவட்டம் முழுவதும் இந்த கணக்கெடுப்பணி நடந்து வருகிறது. பொதுமக்கள் தங்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து கிராம நிர்வாக அலுவலரை சந்தித்து உரிய ஆவணங்களை….

உரிய விவரங்களை தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்து இருக்கிறார்.கனமழையில் மட்டுமே நெல்லை மாவட்டத்தில் 16 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்த குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் இன்று மட்டும் சுமார் 11 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிலரின் உடலானது அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதால், அடையாளம் கண்ட பிறகு மற்றவர்களுக்கும் நிவாரண உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.