இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று தீபாவளி பண்டிகையும் இந்த தீபாவளி பண்டிகை என்று ஒருவர் தங்களுடைய வீட்டை அலங்கரிக்காவிட்டால் அது முழுமை அடையாது. அதன்படி நாமே நம்முடைய சொந்த முயற்சியால்அலங்கார பொருட்களை  செய்து அசத்தலாம். பயன்படுத்திய பேப்பர்களை வைத்து விளக்கு அலங்காரங்கள் செய்யும் பல வீடியோக்கள் இணையதளத்தில் இருக்கிறது. அதை பார்த்து எளிமையான பேப்பர்களை வகை வகையாக மடிப்பதன் மூலமாக விளக்கு அலங்காரங்களை நீங்களே செய்து வீட்டை அழகாக மாற்றலாம்.

கடைகளிலும் இணையதளத்திலும் கூட நிறைய காகித அலங்கார பொருட்கள் கிடைக்கிறது. அதை வாங்கிவிட்டு அழகு படுத்தலாம். சுவரில் ஒட்டப்படும் கண்ணாடிகள் வீட்டை மேலும் அழகாகும். கண்ணாடி துண்டுகளை வாங்கி அதை நீங்களே ஒட்டி அலங்கரிக்கலாம். அவற்றை மேலும் அழகு சேர்க்க சரவிளக்குகளை பயன்படுத்தலாம்.