இந்தியாவின் பிரமாண்டமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி – தீபங்களின் திருவிழா, 14 ஆண்டுகள் வனவாசம் செய்துவிட்டு தேவி சீதா மற்றும் லட்சுமணனுடன் ராமர் அயோத்திக்குத் திரும்பியதைக் குறிக்கும் வகையில் நாடு முழுவதும் பிரம்மாண்டமான அளவில் கொண்டாடப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, இந்த பண்டிகை தீமையை வென்றதன் அடையாளமாக மாறியுள்ளது மற்றும் இந்தியா முழுவதும் அதே ஆரவாரத்துடன் கொண்டாடப்படுகிறது.

தீபாவளியன்று வீட்டை பூக்களால் எப்படி அலங்கரிப்பது என்பது குறித்து சில குறிப்புகளை பார்க்கலாம். சாமந்தி, செண்டுமல்லி போன்ற பெரிய அளவு வண்ணப் பூக்களை கொண்டு உருவாக்கப்படும் தோரணங்களை வீடு எங்கும் கட்டி தொங்கவிடலாம். இந்த தோரணங்கள் வீட்டிற்கு அழகு சேர்ப்பதோடு நல்ல நறுமணத்தையும் கொடுக்கும். கேரள மக்கள் ஓணம் பண்டிகை போது தங்களுடைய வீட்டு வாசலில் பூக்கோலம் இடுவார்கள் .இந்த தீபாவளி தினத்திற்கு நாம் நம்முடைய வீடுகளில் முன்பு பூக்கோலத்தை விட்டு அலங்கரிக்கலாம். பூக்களை பயன்படுத்தி தோரணங்கள் தயார் செய்வது போல பூ மற்றும் பானைகளை பயன்படுத்தி புதிய அலங்காரங்களில் செய்யலாம். அதாவது ஒரு பானையில் இருந்து பூக்கள் அருவி போல் கீழே விழுவதாக ஒரு மாயத் தோற்றத்தை உண்டாக்கி வீடு எங்கும் வைத்துவிடலாம்.