தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள நிவாரணம் – மீட்பு பணி குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாங்க பணம் கேட்டு இருக்கோம்….. பெரிய அமௌன்ட் கேட்டிருக்கிறோம்…. அப்படின்னு சொல்றது ரொம்ப நல்லது…. அதுக்கு வேணும்ங்கிற அளவு டீம்ஸ் போயிருக்காங்க…. பாப்பாங்க … வந்து இங்கிருந்து உள்துறை அமைச்சர் பேசுவாங்க,  சொல்லுவாங்க….  அதுக்கு ஒரு பிராசஸ் இருக்கு… எங்க டீம் பார்த்துப்பாங்க…. ஆனால் இந்த பேரிடர் நடக்கும்போது,  முதலமைச்சர் I.N.D.I அலைன்ஸ் ஓட உட்கார்ந்து இருக்காரு.

அங்கு போய் நான் என் மக்களோடு இருக்கேன். அலையன்ஸ் நீ இரு…. அதை நான் பார்த்துட்டு நான் வரேன். என் மக்கள்,  என் மக்கள்  அப்படின்னு சொல்லிட்டு அங்க இருக்கணும்ங்க…  அது இல்லாம வாய்க்கு என்ன வந்துச்சு…. நஷ்டம் அப்படின்னு சொல்லிட்டு…. எனக்கு 12,000….. 16,000…. எவ்வளவு கொடுக்க வேண்டுமோ ? அதை கொடுப்பாங்க…  நான் அதை கமெண்ட் பண்ணல… 12000 ஜாஸ்தின்னு சொல்லல….. 16,000 குறைச்சல் என்று சொல்லவில்லை….இங்க ஒரு நாள் முழுவதும் இருந்துட்டு அந்த மாவட்ட மக்களை பத்தி என்கிட்ட பேசுறீங்களே…..   நாங்க அதுக்கு முதல் நாளே NDRF  அனுப்பிவிட்டோம் என தெரிவித்தார்.

இந்த வெள்ளத்தின் போது தமிழக மக்கள் ஆளும் கட்சி பிரதிநிதிகள், அரசின் மீது கடும் கோபத்தில் இருந்ததை பார்க்க முடிந்தது. இதற்கு 4  மாவட்டத்திலும் மழைநீர் வடிகால் பணியை மேற்கொள்ளாது தான் காரணம் என மக்கள் குற்றம் சாட்டியிருந்தாங்க. அது மட்டும் இல்லாமல் இதற்கு முக்கியமாக பொறுப்பேச்சு, தமிழக முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்று நீங்கள் வலியுறுத்துகிறீர்களா ?

இரண்டாவது கொஸ்டின்  அடுத்த வருடமும் இது போன்ற பிரச்சனை வராமல் மக்களை காப்பதற்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் நீங்கள் என்ன வலியுறுத்துறீங்க என்ற கேள்விக்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,

2ஆவது கேள்விக்கு பதில் கொடுக்கின்றேன். தமிழக அரசு இந்த அதிகபட்ச மழை  2015ல் பார்த்தோம். இப்ப திருப்பி பார்க்கிறோம். அது சென்னை மட்டும்தானா… இல்லை தென் மாவட்டமா ? என ல்லாம் சயின்டிபிக் டேட்டாவும் அவுங்க கிட்ட இருக்கு. அதற்கு ஏற்ப சென்னை உட்கட்டமைப்பு வசதிக்கு கொடுத்த பணமும் அவங்ககிட்ட இருக்கு. அதெல்லாம் அந்த 4000 கோடி. இதெல்லாம் சரியான விதத்தில்….  சரியான சமயத்துக்குள்ள உபயோகப்படுத்தி இருந்தா ? இந்த நிலைமை வராது….

அதைப்பற்றி சரியான விவரம் கூட கொடுக்கிறது இல்லை என்கிறது என்னுடைய குற்றச்சாட்டு. 4000 கோடி. அதுல நான் இப்பவே உங்களிடம் கேட்கிறேன் …. 92% செலவாகிட்டு என சொன்ன அமைச்சரே, மழை  வந்த பிறகு 42% என்று சொன்னால் எதை நம்புறது  மக்கள் ? நீங்க 92 சதவீதம் செலவழிச்ச பிறகும் கூட இப்படி ஆயிருந்தா சொல்லி இருக்கலாம்…

இல்லைங்க எங்களால கூட எதிர்பார்க்க முடியல…  4,000 கோடி செலவு பண்ணிட்ட போது சென்னை மூழ்கிரிச்சுன்னு சொன்னீங்கன்னா நான் ஒத்துக்குறேன். நீங்க செலவே பண்ணல….  42 % என இப்ப நீங்க கரெக்ட் பண்றீங்க. அந்த 42 % நிஜம் தானா என கேள்வி கேட்கணுமான்னு இருக்கு.  அதனால சென்னை உட்கட்டமைப்பு டெவலப்மென்ட்க்கு கொடுத்த பணம் கூட சரியாக உபயோகப்படவில்லையோ, அப்படின்னு நான் கேள்வி கேட்கிறேன். உங்க கேள்வி முதல் கேள்விக்கு நான் பதில் கொடுக்க விரும்பல என தெரிவித்தார்.